குசல் மெண்டிஸும் சதம் அடித்தார்…!!

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் மெண்டிஸ் சதம் அடித்துள்ளார்.

முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கட் இழப்புக்கு 237 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இரண்டாம் நாள் ஆட்டமான ​நேற்றைய தினம் இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா தனது 04வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் குசல் மெண்டிஸ் சற்று முன்னர் வரை 101 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றார்.

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment