இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால்…!!

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடருக்கான இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

அசித பெர்னான்டோ, ஜீவன் மென்டிஸ் மற்றும் அமில அபொன்ஸே ஆகிய வீரர்களும் இப்போட்டித் தொடரில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை கிரிகெட் சபை அறிவித்துள்ளது.

1 ஆவது இருபதுக்கு இருபது போட்டி பெப்ரவரி 15 ஆம் திகதியும், 2 ஆவது போட்டி பெப்ரவரி 18 ஆம் திகதியும் நடைபெற உள்ளது.

இப்போட்டித் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி சார்பாக 15 வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வணியை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர அனுமதித்துள்ளதாகவும் இலங்கை கிரிகெட் சபை தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment