சித்தராமையாவை வளர்த்து விட்டது மிக பெரிய தவறு என தேவகவுடா குற்றச்சாட்டு..!!

சித்தராமையாவை வளர்த்து விட்டது எனது மிக பெரிய தவறு என முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் தேசியத் தலைவருமான தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடகம் மாநில தலைநகர் பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது இதில், முன்னாள் பிரதமரும், கட்சியின் தேசிய தலைவருமான தேவகவுடா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

சரவணபெலகோலாவின் மகாமஸ்தாபிஷேக தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நானும் கலந்து கொண்டேன்.

விழா அழைப்பிதழில் எனது பெயர் அச்சிடப்பட்டிருந்தும் பேச எனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. என்னை அவமானப்படுத்தும் நோக்கில் முதல் மந்திரி சித்தராமையா செயல்பட்டு வருகிறார். கர்நாடக அரசியல் வரலாற்றில் நான் கண்ட தரம் தாழ்ந்த அரசியல்வாதி சித்தராமையா.

இப்படிப்பட்ட ஒருவரை நான் வளர்த்துவிட்டதற்காக கர்நாடக மக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கர்நாடகத்தில் முதல் மந்திரியாகவும், நாட்டின் பிரதமராகவும் பதவி வகித்த என்னை, முதல் மந்திரி சித்தராமையா அவமதித்து விட்டார். இவர் இன்னும் எத்தனை நாளைக்கு சித்தராமையா முதல் மந்திரியாக இருக்கப் போகிறார்? இவர் மீண்டும் முதல்வராகாமல் தடுக்க எல்லா முயற்சிகளையும் எடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment