ஹெல்மெட் இல்லாமல் வந்தால் பூஜை கிடையாது என ஒடிசா கோவிலில் விநோத சட்டம்..!!

ஒடிசா மாநிலத்தின் ஜகதீஷ்பூர் மாவட்டத்தில் ஜான்கந்த் பகுதியில் பிரசித்தி பெற்ற மா சரளா கோவில் அமைந்துள்ளது. புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இந்த கோவிலில் வந்து பூஜை செய்வது வழக்கம். அதேபோல் தினசரி வெளியே செல்பவர்களும் விபத்துகள் ஏற்படாமல் தடுப்பதற்காக இக்கோவிலில் தினமும் பூஜை செய்து செல்வார்கள்.

இந்நிலையில், இந்த கோவிலுக்கு ஹெல்மெட் இல்லாமல் வாகனத்தில் வரும் பக்தர்களுக்கு இனி பூஜை செய்யப்பட மாட்டாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பக்தர்கள் இடையே ஹெல்மெட் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

சாலை விபத்துகளை குறைக்கும் பணியில் கோவில் நிர்வாகத்தினர் இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மற்ற கோவில் நிர்வாகத்தினரும் இதை பின்பற்றி விபத்துகளை கட்டுப்படுத்த உதவி செய்ய வேண்டும் என ஜகதீஷ்பூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஜெய் நாராயண் பங்கஜ் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டத்தில் விபத்துகளை குறைப்பதற்காக போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். இதன் பயனாக 2016-ம் ஆண்டைவிட கடந்த ஆண்டு விபத்துகளின் எண்ணிக்கை 14 சதவிகிதம் குறைந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Comments (0)
Add Comment