ஜம்மு காஷ்மீரில் பாக். படைகள் தாக்குதலில் இந்திய பெண் மரணம்..!!

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ஒரு பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்ஷேரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்று மாலை அத்துமீறி தாக்குதல் நடத்தினர். அங்குள்ள ராணுவ நிலைகள் மற்றும் புக்ரானி கிராமத்தை நோக்கி அவர்கள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.

இதேபோல் நேற்று மதியம் பூஞ்ச் மாவட்டத்தின் காரி கர்மடா பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல்களுக்கு இந்திய தரப்பில் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது.

இந்த ரஜோரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் புக்ரானி கிராமத்தை சேர்ந்த பிரவீன் அக்தர் என்ற பெண்ணுக்கு குண்டடிபட்டது. உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அப்பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Comments (0)
Add Comment