பாபர் மசூதி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- முஸ்லிம் சட்ட வாரியம் அறிவிப்பு..!!

அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் ஆலோசனை கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக ஐதராபாத் நகரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் தலைவர் மவுலானா ரபே ஹஸ்னி நத்வி, பொதுச்செயலாளர் மவுலானா வாலி ரெஹ்மானி உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஐதராபாத் நகர பாராளுமன்ற உறுப்பினரும், அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹடுல் முஸ்லிமின் கட்சி தலைவருமான அசாதுதீன் ஒவைசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ராஜ்யசபாவில் முடக்கி வைக்கப்பட்டுள்ள முத்தலாக் ஒழிப்பு மசோதாவை முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை என இந்த கூட்டத்தில் உரையாற்றிய தலைவர்கள் குறிப்பிட்டதாக செய்தியாளர்களிடம் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.

மேலும், ஒருமுறை கட்டப்பட்ட மசூதி உலகின் அழிவுக்காலம் வரை நீடிக்கும். எனவே, பாபர் மசூதி விவகாரத்தில் எங்கள் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. இதில் சமரசத்துக்கு இடமில்லை என அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Comments (0)
Add Comment