உத்தரப்பிரதேசத்தில் கள்ளநோட்டுகளை அள்ளி வழங்கும் ஏ.டி.எம்…!!

உத்தரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷஹர் மாவட்டத்திற்குட்பட்ட கான்பூர் நகருக்கு அருகாமையில் உள்ள கிட்வாய்நகர் மார்பிள் மார்க்கெட் பகுதியில் ஆக்சிஸ் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் ஒன்றுள்ளது. இந்த மையத்தில் பணம் எடுத்த சிலருக்கு குழந்தைகள் விளையாடும் 500 ரூபாய் கள்ளநோட்டுகள் கலந்து வந்துள்ளது.

குறிப்பாக, 20 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த ராமேந்திரா அவாஸ்தி என்பவருக்கு ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும், 10 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்த சச்சின் என்பவருக்கு ஒரு 500 ரூபாய் கள்ளநோட்டும் சேர்ந்து வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்துவரும் அதேவேளையில், அந்த ஏ.டி.எம். இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஒப்பந்தத்தை பெற்றுள்ள நிறுவனத்திடம் விசாரணை நடத்தி, இந்த குற்றத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment