சுற்றுலா பயணிகளை விரட்டியடிப்பேன் என சுற்றுலா துறை மந்திரி பேசியதால் சர்ச்சை..!

எங்களது கலாசாரத்தை மதிக்காத சுற்றுலா பயணிகளை விரட்டி அடிப்பேன் என கோவா சுற்றுலா துறை மந்திரி மனோகர் அஜ்கோங்கர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் சுற்றுலா துறை மந்திரியாக இருந்து வருபவர் மனோஜ் அஜ்கோங்கர். மகாராஷ்டிரவாடி கோமந்தக் கட்சியை சேர்ந்தவர்.

இதற்கிடையே, கோவாவில் உணவு மற்றும் கலாசார விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சுற்றுலா துறை மந்திரி மனோகர் அஜ்கோங்கர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

கோவாவிற்கு சுற்றுலா வருபவர்கள், இங்குள்ள கலாசாரத்தையும் மக்களையும் மதிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்களை நான் விரட்டி அடிப்பேன். இதில் யார் சொன்னாலும் நான் கேட்க மாட்டேன் என்பதை தெளிவாக கூறிக் கொள்கிறேன். போதை மருந்து விற்கும் சுற்றுலா பயணிகளும், ஓட்டல்களும் நமக்கு வேண்டாம் என்றார். சுற்றுலா துறை மந்திரியின் இந்த பேச்சு கோவாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவாவின் நகர திட்டமிடல் துறை மந்திரி விஜய் சர்தேசி, இங்கு வருகை தரும் வடமாநிலத்தவர்கள் கோவாவை மற்றொரு அரியானா மாநிலமாக மாற்ற விரும்புகிறார்கள் என பேசி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment