மராட்டியத்தில் ஆலங்கட்டி மழைக்கு 3 பேர் பலி..!!

மராட்டியத்தில் தற்போது குளிர்காலம் முடியும் தருவாயில் வெயில் எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் விதர்பா, மரத்வாடா மண்டல சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. கற்களை போல வானத்தில் இருந்து கொட்டிய ஆலங்கட்டிகள் பலரின் தலையை பதம் பார்த்தது. இதில் படுகாயம் அடைந்த பெண் உள்பட 3 பேர் இறந்தனர்.

மேலும் அப்பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த விவசாய பயிர்கள் நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டில் இதேபோல் பெய்த ஆலங்கட்டி மழையால் ஏராளமான விவசாய பயிர்கள் நாசமானது. இதனால் மனமுடைந்து பல விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment