செல்லாத ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்யும் பணி நீடிப்பு – ரிசர்வ் வங்கி..!!

மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி முதல் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. மேலும் செல்லாத நோட்டுகளை வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும் என்றும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட செல்லாத ரூபாய் நோட்டுகளை எண்ணும் பணி ரிசர்வ் வங்கியில் நடந்து வருகிறது.

இதனிடையே பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் செல்லாத ரூபாய் நோட்டுகள் எவ்வளவு ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளன என தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலில், கடந்த ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரை எண்ணியதில் வங்கிக்கு 90 சதவீத செல்லாத நோட்டுகள் அதாவது ரூ.15.28 லட்சம் கோடி திரும்ப வந்துள்ளன. கடந்த 15 மாதங்களாக செல்லாத ரூபாய் நோட்டுகளை ஆய்வு செய்யும் பணி தொடர்ந்து நீடித்து வருகிறது. இதற்காக 59 அதிநவீன எந்திரங்களும், மேலும் 16 தனியார் வங்கி எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பணி முடிந்த பிறகு திரும்ப வந்த தொகையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

Comments (0)
Add Comment