மேகாலயா சட்டமன்ற தேர்தல் – வாக்காளர் பட்டியலில் வினோத பெயர்கள்..!!

மேகாலயாவில் வருகிற 27-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த செல்லா சட்டமன்ற தொகுதி இந்தியா-வங்காளதேச எல்லையில் உள்ளது. இந்த தொகுதியில் உள்ள எலகா என்ற கிராமத்தின் வாக்காளர் பட்டியலில் வினோத பெயர்கள் இடம்பெற்று உள்ளன.

இந்த கிராமத்தில் நாட்டின் பெயர்களான இத்தாலி, அர்ஜென்டினா, சுவீடன், ஜெருசலேம், இந்தோனேசியா எனவும், மாநில பெயர்களான திரிபுரா, கோவா என்றும், கடல்கள் பெயரில் அரேபியன் சீ, பசுபிக் எனவும், ஆங்கில நாட்கள் பெயரில் சண்டே, தேர்ஸ்டே எனவும், கோள்கள் பெயரில் வீனஸ், சாட்டர்ன் எனவும் மற்றும் கண்டங்கள் பெயர்கள் உள்பட பல்வேறு வினோத பெயர்களில் ஏராளமான வாக்காளர்கள் உள்ளனர்.

Comments (0)
Add Comment