மகாராஷ்டிராவில் 2 பேருந்துகளுக்கு தீ வைப்பு – போலீசார் குவிப்பு..!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் இன்று பிற்பகலில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து எதிர்பாராத விதமாக 12 வயது சிறுமி மீது மோதியது. அப்போது, பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதால் சிறுமி பரிதாபமாக பலியானார்.

விபத்தில் சிறுமி உயிரிழந்ததை அறிந்து ஆத்திரமடைந்த உறவினர்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்கள் அந்த வழியாக சென்ற இரண்டு பேருந்துகளை சேதப்படுத்தி, தீ வைத்து எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பேருந்து எரிந்து கொண்டிருந்த இடத்திற்கு தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காரணமாக கலவரம் ஏற்படுவதை தடுப்பதற்காக போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Comments (0)
Add Comment