இரண்டாவது திருமணம் செய்த கணவனை அம்மிக்கல்லால் அடித்து கொன்ற மனைவி..!!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பெய்ரலி மாவட்டத்தைச் சேர்ந்த வாசீம் தனது மனைவி பாப்லி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் வாசீம் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இது 4 நாட்களுக்கு முன்னர் பாப்லிக்கு தெரிய வந்ததும் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து, நேற்று இரவு பாப்லியிடம் தனது இரண்டாவது மனைவியை ஏற்றுக்கொள்ளும் படி வாசீம் கூறியுள்ளார், இதற்கு பாப்லி மறுப்பு தெரிவித்தார். இருவருக்கும் இடையே கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் தூங்கச் சென்றனர். இரண்டாவது திருமணம் செய்த கோபத்தில் கணவர் தூங்கிக்கொண்டிருக்கும் போது பாப்லி அம்மிக்கல்லை தூக்கி மேலே போட்டு கொடூரமாக கொலை செய்தார்.

இதில் வாசீம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொலை குறித்து போலீசில் தகவல் தெரிவிக்கப்படாமல் இறுதிச் சடங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

இக்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பாப்லியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இரண்டாவது திருமணம் செய்த கணவன் மீதுள்ள கோபத்தில் அம்மிக்கலை வீசி மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment