மூடப்பட்ட சிறைச்சாலைகளை ஆதரவற்றோர் இல்லமாக மாற்ற தெலுங்கானா முடிவு..!!

தெலுங்கானா மாநிலத்தில் மத்திய சிறைகள் தவிர்த்து பல மாவட்டங்களில் உள்ள சுமார் 14 கிளைச்சிறைகள் மூடப்பட்டன. அனுமதிக்கப்பட்ட அளவைவிட மிக குறைவான கைதிகளே அங்கு இருந்ததால் சிறைகள் மூடப்பட்டன. இந்த ஆண்டு இறுதியில் மேலும், 4 கிளைச்சிறைகளை மூட சிறைத்துறை முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மூடப்பட்ட சிறைகளை ஆதரவற்றோர்கள், கைவிடப்பட்ட பெண்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கான இல்லமாக மாற்ற சிறைத்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பரிந்துரைகள் அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை டி.ஜி.பி வி.கே சிங் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள், தன்னார்வலர்கள், மனநல ஆலோசகர்கள் பணிக்கு அமர்த்தப்பட இருப்பதாகவும், ஆதரவற்றோர் இல்லத்தில் இருப்பவர்களை கொண்டு வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு அரசுத்துறையே சமூகப்பணியில் இறங்குவது இதுவே முதன்முறையாக இருக்கும் என வி.கே சிங் கூறியுள்ளார்.

Comments (0)
Add Comment