ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பதவி விலகவுள்ளாரா..?

ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியின் உயர் செயல்திறன் முகாமையாளரான சைமன் வில்லிஸ் தனது பதவியிலிருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2016ஆம் ஆண்டு, 3 ஆண்டுகள் தவணைக்காலமாக ஸ்ரீலங்கா அணியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார்.

எனினும் தற்போது, அவர், தனது சேவையை இரண்டு ஆண்டுகளுடன் முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளதாகவும், இதன் அடிப்படையில் தனது பதவியில் இருந்து விலகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் குழுவின் முன்னாள் தலைவராக இருந்த அரவிந்த டி சில்வாவின் பரிந்துரையின் பேரில், குறித்த பதவிக்கு என்ற புதிய பதவிக்கு இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் வில்லிஸ் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment