நான் இறந்து போய்விடுவேன் என்றார்கள்.. எனக்கும் பயம் இருந்தது.. பகீர் கிளப்பும் செரினா வில்லியம்ஸ்…!! (படங்கள்)

குழந்தை பிறந்த சில தினத்தில் தான் உயிருக்கு மிகவும் போராடியதாக செரினா வில்லியம்ஸ் கூறியுள்ளார். அமெரிக்காவின் டென்னிஸ் புயலை வாழ்க்கை கடந்த 6 மாதமாக புரட்டி எடுத்து இருக்கிறது.

பல்வேறு கஷ்டங்களுக்கு பின் இவர் மீண்டும் விளையாட வந்துள்ளார், கிட்டத்தட்ட 6 மாதம் பின் அவர் களம் இறங்கி இருக்கிறார்.

இவர் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். 9 நாட்களுக்கு முன்பு ஃபெட் கப் டபுள்ஸ் கோப்பை போட்டிக்காக திரும்பி வந்துள்ளார்.

கர்ப்பம்

செரினா கர்ப்பமாக இருந்த போதும் போட்டிகளில் தொடர்ந்து விளையாடினார். 8வது மாதம் வரை கூட இவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதற்கு ஏற்றபடி தன்னுடைய உடலை தயார் நிலையில் வைத்தும் இருந்தார்.

குழந்தை பிறந்தது

இந்த நிலையில் 6 மாதம் முன் அவருக்கு குழந்தை பிறந்தது. அந்த அழகான பெண் குழந்தைக்கு ஒலிம்பியா என்று பெயர் வைத்தார்கள். அதே சமயம் அவர் போட்டிகளில் விளையாட முடியாத அளவிற்கு படுத்தபடுக்கை ஆகியுள்ளார்.

மோசமான பிரச்சனை

இவர் சுவாச குழாய் என நிறைய திசுக்களில் ரத்தம் அடைப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் 3 நாட்கள் மிகவும் மோசமான நிலையில் உயிருக்கு போராடி இருக்கிறது. 3 ஆப்ரேஷன் செய்யப்பட்டு இவர் ஆபத்தில் இருந்து நீங்கி இருக்கிறார்.

காப்பாற்றினார்கள்

இவர் அந்த மூன்று நாட்களும் சுவாசிக்க கூட சிரமப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவர் இறக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர். இவ்வளவு கஷ்டங்களுக்கு பிறகு அவர் மீண்டும் களத்திற்கு திரும்பி உள்ளார்.

Comments (0)
Add Comment