தேசிய கால்பந்தாட்ட குழாமிற்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம்…!!

இலங்கை தேசிய கால்பந்தாட்ட குழாமுக்கான தெரிவு நடைமுறை அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இரண்டு குழாம்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவர் அனுர டி சில்வா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் தெற்காசிய கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் இடம்பெறவுள்ளது.

இதனை இலக்காகக் கொண்டு பயிற்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தலைவர் அனுர டி சில்வா குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment