கூல் கேப்டன் பண்ற வேலையா இது?.. மனிஷ் பாண்டேவை மோசமாக திட்டிய டோணி..!!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டியில் மனிஷ் பாண்டேவை டோணி திட்டி இருக்கிறார். இந்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 2வது டி-20 போட்டி போர்ட் செஞ்சுரியன் மைதானத்தில் நடந்தது. இதில் இந்தியா தோல்வி அடைந்து இருக்கிறது.

முதலில் விளையாடிய இந்தியா 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க 18.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சிறப்பு

இந்த போட்டியில் டோணி, மனிஷ் பாண்டே ஜோடி போட்டு ஆடினார்கள். டோணி 3 சிக்ஸ், 4 பவுண்டரி என அசால்ட்டாக ஆடி இருக்கிறார். 28 பந்துகளில் 52 ரன் அடித்துள்ளார். அதேபோல் மனிஷ் பாண்டே 48 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸ் என 79 ரன் எடுத்துள்ளார்.

திட்டினார்

இதில் டோணி முதல்முறையாக கோவப்பட்டு இருக்கிறார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மனிஷ் பாண்டேவை அவர் ஹிந்தியில் மோசமாக திட்டும் வீடியோ வெளியானது.

மோசமா

அவர் பேசுவது எதோ மோசமான வார்த்தைகளை சொன்னது போலவே இருந்தது. இதனால் அவர் மிகவும் கேவலமாக மனிஷ் பாண்டேவை திட்டி இருக்கிறார் என்று கூறப்பட்டது. இந்த வீடியோ வைரல் ஆனது.

உண்மை

இதில் அவர் பேசியது பாதி கேட்கவில்லை. மீதியை வைத்து அவர் மனிஷ் பண்டேவிடம் ” அங்கே என்ன பார்த்துட்டு இருக்க? இங்க பாரு. கவனமா இரு” என்று கடைசி நேரத்தில் பேசியுள்ளார்.

பதில் என்ன

இதற்கு தற்போது மனிஷ் பாண்டே பதில் அளித்துள்ளார். அதில் ”களத்தில் டோணி திட்டிய முதல் வீரர் நான்தான். கண்டிப்பாக எனக்கு பிறக்கும் குழந்தைகளிடம் இதை சொல்வேன். இதைவிட பெருமை எனக்கு வேறன்ன இருக்க முடியும்” என்றுள்ளார்.

Comments (0)
Add Comment