சார் கடன் கொடுங்க…. கெஞ்சும் ஜிம்பாப்வே..!! (வீடியோ)

ஆப்பிரிக்க நாடான ஜிம்ப்பாவேவின் கிரிக்கெட் அணி மிகப் பெரிய சிக்கலில் உள்ளது. வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிதி சிக்கலில் அதன் கிரிக்கெட் வாரியம் உள்ளது. அதனால், கடன் கொடுக்கும்படி, ஐசிசியிடம் கேட்டுள்ளது.

டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டியில் விளையாடும் அந்தஸ்து பெற்றுள்ள ஜிம்பாப்வே அணி, ஒரு காலத்தில், மற்ற அணிகளுக்கு சவாலாகவே இருந்தது.

சமீபத்தில் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தற்போது விளையாடி வரும் ஒருதினப் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் ஜிம்பாப்வே தோல்வியடைந்தது. நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 195 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

முதல் ஆடிய ஆப்கானிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் குவித்தது. ஜிம்ப்பாவே, 32.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 95 ரன்கள் மட்டுமே எடுத்தது,

இது ஒருபுறம் இருக்க, மிகப் பெரிய நிதி சிக்கலில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் உள்ளது. வீரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சம்பளம் கொடுக்க முடியாமல் கடந்தாண்டு திணறியது ஜிம்பாப்வே.

இந்த நிதி சிக்கலில் இருந்து தப்பிக்க கடன் தரும்படி சர்வதேச கிரிக்கெட் சங்கமான ஐசிசியிடம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் கேட்டுள்ளது.

இதனிடையில், வரும் ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயில் 2 டெஸ்ட்கள், 5 ஒருதினப் போட்டிகள் மற்றும் டி-20 போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் அணி செல்ல உள்ளது. நிதி நெருக்கடி உள்ளதால் அந்தப் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் 3 டி-20 போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே அணி வர உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. அதுவும் நடக்குமா என்பது சந்தேகமே.

Comments (0)
Add Comment