வவுனியாவை வந்தடைந்தார் உலக சாதனை மரதன் வீரர்…!! (படங்கள்)

வவுனியா பிறப்பிடமாகவும் கனடாவில் வசித்து வரும் உலக சாதனை வீரன் சுரேஸ் ஜோஷிம் சமாதானத்தினை வலியுறுத்தி ஆரமபித்த மரதன் ஓடடம் இன்று வவுனியாவை வந்தடைந்தது.
கனடாவில் இருந்து ஆரம்பித்த மரதன் இன்று வவுனியா சூசைப்பிள்ளையார்குளத்தை வந்தடைந்தார்.

ஏழ்மையின் சின்னமாகிய பனையின் பாளையை ஏந்தியவாறாக 72 நாட்டுக்கு 123 நாட்களில் சுமார் 4000 கிலோமீற்றர் ஓடிச்செல்லவுள்ள இப்பயணமானது இன்று வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி ஆரம்பித்திருந்தது.

யுத்த பிரதேசமான பாலஸ்தீனத்தில் இருந்து ஆரம்பித்த இவ் மரதன் ஒட்டமானது வவுனியா மாங்குளம் கிளிநொச்சியூடாக யாழ்ப்பாணத்தை சென்று முடிவடையவுள்ளது.

இன்றைய தினம் மாலை 03.00 மணிக்கு வந்தடைந்த இவ் உலகசாதனை வீரனுக்கு தமிழ் விருட்சம் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்ட்டதோடு நினைவுச்சின்னமும் வழங்கி வைக்கப்பட்டதுடன் வவுனியா இளைஞர்கள் சிலரும் இப்பயணததில் இணைந்திருந்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

Comments (0)
Add Comment