வாவ் கிரிக்கெட் பேட்டில் வித்தை காட்டிய கனடா அதிபர்.. மிரண்டு போன கங்குலி, அசாருதீன்..!!

டெல்லியில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றில் கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறார். அவருடன் அவரது குழந்தைகளும் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள்.

8 நாள் பயணத்தில் இந்தியாவில் பல இடங்களை அவர் பார்வையிட்டு இருக்கிறார்.இந்த நிலையில் தற்போது டெல்லிக்கு மீண்டும் திரும்ப வந்துள்ளார். டெல்லியில் உள்ள தேசிய கிரிக்கெட் மைதானத்தை பார்வையிட்டார்.

மேலும் அங்கு கங்குலி, அசாருதீன் ஆகியோருடன் உரையாடினார்.

வைரல்

பிரதமர் மோடி ஜஸ்டின் ட்ரூடோவுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை. இது பெரிய அளவிற்கு பிரச்சனையை உருவாக்கியது. உலக அளவில் இதற்கு கண்டனங்கள் எழுந்தது. இதனால் அவர் வைரல் ஆனார்.

விளையாடினார் இந்த நிலையில் இன்று காலை டெல்லியில் இருக்கும் தேசிய விளையாட்டு மைதானத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு இருக்கும் விளையாட்டு வீரர்களுடன் உரையாடினார். மேலும் அவரின் குழந்தைகள் கிரிக்கெட் விளையாடினார்கள்.

பேட் வித்தை

மேலும் அவர் கிரிக்கெட் பேட்டை வைத்து கையில் சுற்றி சுற்றி விளையாடி இருக்கிறார். அவர் வித்தை பார்க்கவே கண்கொள்ளா காட்சியாக இருந்துள்ளது. இந்த வீடியோ வைரல் ஆகி இருக்கிறது.

உரையாடல்

அவர் காட்டிய வித்தையை கங்குலியும் பார்த்துக் கொண்டு இருந்தார். அதேபோல் அவர் அங்கு இருந்த கங்குலி, அசாருதீன் கூட உரையாடி இருக்கிறார். கனடாவில் இன்னும் சில நாட்களில் டி-20 போட்டிகள் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment