ஆசிட் ஊற்றி தீ வைத்த பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி மரணம்..!!

சென்னை அடுத்த வாணுவம்பேட்டையில் ஆசிட் ஊற்றி தீ வைக்கப்பட்ட பெண் ஊழியர் யமுனா, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

சென்னை மடிப்பாக்கம் வாணுவம்பேட்டையில் ராஜா என்பவருக்கு சொந்தமான தனியார் ரத்த பரிசோதனை நிலையம் உள்ளது. இந்த நிலையத்தில் யமுனா என்ற பெண் வேலை பார்த்து வந்தார்.

கடந்த 19-ம் தேதி வழக்கம்போல் வேலைக்கு வந்த யமுனாவிற்கு அதன் உரிமையாளர் ராஜா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் தனக்கு உடன்பட மறுத்த யமுனா மீது ஆசிட் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

இதில் யமுனா படுகாயம் அடைந்தார். அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், ஆசிட் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த யமுனா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

யமுனா மீது ஆசிட் ஊற்றி எரித்த ராஜாவை போலீசார் ஏற்கனவே கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக போலீசார் அவர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment