கர்நாடகா சட்டசபை தேர்தல் – 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு ராகுல் காந்தி ஒப்புதல்..!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

கர்நாடகா மாநிலத்தில் உள்ள 224 சட்டசபை தொகுதிக்கான தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், அம்மாநில சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரங்களை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வினர் ஏற்கனவே தொடங்கிவிட்டனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்க 43 பேர் கொண்ட தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த குழுவில் 43 பேருடன் கர்நாடகா மாநில காங்கிரஸ் முக்கிய தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள் மற்றும் எம்.பி.க்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தகவலை காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்தன் திவேதி தெரிவித்தார்.

Comments (0)
Add Comment