ஏழைகளுக்காக கண்டுபிடிப்புகள் இருக்க வேண்டும் என மோடி ரேடியோவில் பேச்சு..!!

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி ரேடியோ மூலம் உரையாற்றி வருகிறார். இன்றைய பேச்சில் அவர் கூறியதாவது:-

பெண்கள் சக்தி ஒரு முன்னோடியான பாத்திரத்தை வகிக்கிறது மற்றும் மைல்கற்களை நிறுவுகிறது. மேலும், பெண் சக்திக்கு எந்த வரம்புகளும் இல்லை. பெரும் விஞ்ஞானிகளின் மரபு இந்தியாவில் உள்ளது. தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஏழை மற்றும் நலிவடைந்தவர்களின் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட வேண்டும்.

தேசிய விஞ்ஞான தினத்தில், நம் விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நாம் பாதுகாப்பின் மதிப்பை புரிந்து கொள்ள வேண்டும். எச்சரிக்கை மற்றும் விழிப்புடன் இருப்பது விபத்துகளைத் தடுக்க உதவும்.

பசுமை எரிசக்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் புரட்சியை ஏற்படுத்த உங்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன். கழிவுகளை உங்கள் கிராம நலனுக்கானதாக மாற்றுங்கள். பெண்களின் முன்னேற்றமே இந்தியாவை நகர்த்தி கொண்டு செல்லும்.

70 ஆண்டுகளாக இருளில் இருந்த எலிபாந்தா தீவுகள் தற்போது மின்சார வசதிகளை பெற்றுள்ளது. இது வளர்ச்சிகாக முன்னுதாரணம். வரும் ஹோலி பண்டிகைக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு மோடி பேசியிருந்தார். முன்னதாக, மன் கி பாத் நிகழ்ச்சியில் எது தொடர்பாக பேசுவது என மக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment