ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் காவலர் உயிரிழப்பு…!!

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் காயமடைந்த போலீஸ் காவலர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஒரு வழிபாட்டு தளம் மீது இன்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ் காவலர் படுகாயமடைந்தார்.

உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் இந்திய பாதுகாப்புப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment