சத்தீஷ்காரில் கண்ணி வெடியில் சிக்கி ஆயுதப்படை வீரர்கள் 2 பேர் காயம்..!!

சத்தீஷ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டம் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாகும்.

அங்கு தர்லாகுடா என்கிற கிராமத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் மாநில ஆயுதப்படை வீரர்கள் நேற்று வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆயுதப்படை அதிகாரி புரன் சிங் மற்றும் வீரர் புவனேஸ்வர் யாதவ் ஆகிய இருவரும், நக்சலைட்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியின் மீது காலை வைத்துவிட்டனர்.

கண்ணி வெடி வெடித்ததில் அவர்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டு காயம் அடைந்தனர். உடன் இருந்த சக வீரர்கள் உடனடியாக அவர்கள் இருவரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Comments (0)
Add Comment