மோடிக்கு விவசாயிகள் பற்றி கவலை இல்லை – ராகுல்காந்தி குற்றச்சாட்டு..!!

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கர்நாடகா மாநிலத்தில் பிரசாரம் செய்து வருகிறார்.

பாசல்கோட் மாவட்டம் சிக்கபதசலவி கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-

கர்நாடகத்தில் தலைசிறந்த சமூக சீர்த்திருத்தவாதி பசவண்ணர் தனது வசனங்கள் மூலம் சமுதாயத்தை பண்படுத்த முயற்சித்துள்ளார். செய்யும் வேலையை திறம்பட செய்ய வேண்டும் என்று கூறிய அவர் சொன்னப்படி நடந்த கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

ஆனால் பிரதமர் நரேந்திரமோடி 2014 பாராளுமன்ற தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் எதையும் செயல்படுத்தவில்லை. பசவண்ணர் வழியில் அவர் ஆட்சி நடத்த தவறி விட்டார்.

கர்நாடகத்தை ஆட்சி செய்யும் சித்தராமையா சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். பச வண்ணர் வழியில் சித்தராமையா ஆட்சி நடத்தினார்.

கர்நாடகம்தான் பிற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது. குஜராத்தில் உயர் கல்வி பயில வேண்டுமானால் ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகும். ஆனால் கர்நாடகாவில் பெண்கள் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்க காங்கிரஸ் அரசு திட்டம் வகுத்துள்ளது.

விவசாயிகளின் பயிர்க்கடனை தள்ளுபடி செய்யாத பிரதமர் மோடி பெரிய நிறுவனங்கள், தொழில் அதிபர்கள் கடனை மட்டும் தள்ளுபடி செய்துள்ளார். பெரு நிறுவனங்களின் வளர்ச்சியில் மட்டுமே பிரதமர் கவனம் செலுத்தி வந்துள்ளார்.

சிறு வியாபாரிகள், ஏழைகள், விவசாயிகள், நலிவடைந்தோர் குறித்து பிரதமருக்கு அக்கறை இல்லை.

கடந்த தேர்தலின்போது கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று சொன்ன மோடி அதை செயல்படுத்தினாரா? சித்தராமையா அரசுதான் சொன்னபடி ஆட்சியை நடத்துகிறது. எனவே கர்நாடகத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வாருங்கள்.

இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

Comments (0)
Add Comment