ம.பி சட்டசபையில் கவர்னரின் கன்னிப்பேச்சுக்கு காங். எம்.எல்.ஏ.க்கள் இடையூறு..!!

மத்தியப்பிரதேசம் மாநில சட்டபையில் பட்ஜெட் கூட்டம் கவர்னர் உரையுடன் இன்று தொடங்கியது. கடந்த மாதம் புதிய கவர்னராக பொறுப்பேற்ற ஆனந்திபெண் பட்டேல் இன்று தனது கன்னிப்பேச்சை சட்டசபையில் ஆற்றினார். அரசின் நான்காண்டு சாதனைகள், நலத்திட்டங்களை தனது உரையில் அவர் குறிப்பிட்டார்.

ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல பிரச்சனைகளை முன்வைத்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கவர்னரை உரையாற்ற விடாமல் கோஷம் எழுப்பினர். இடையூறு ஏற்பட்டாலும், தனது உரையை ஆனந்திபெண் பட்டேல் வாசித்து முடித்தார்.

28-ம் தேதி வரை நடக்க உள்ள இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், கவர்னர் உரைக்கு நன்றி கூறும் விவாதம், மானியக்கோரிக்கைகள் குறித்த விவாதங்கள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment