திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் கால்பந்து நட்சத்திரம் விலகல்..!!

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பைசூங் பூட்டியா, கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் திரினாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2014 பாராளுமன்ற தேர்தல், 2016 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், திரினாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பூட்டியா பதிவிட்டுள்ளார். இதனை வரவேற்றுள்ள மத்திய இணை மந்திரி கிரண் ரெஜிஜு, மம்தா தலைமையில் அவரால் செயல்பட முடியாது என நான் ஏற்கனவே தெரிவித்திருந்தேன் என தெரிவித்துள்ளார்.

திரினாமுல் கட்சியிலிருந்து விலகிய அவரை வளைக்க பா.ஜ.க மற்றும் சிக்கிம் க்ராந்திகாரி மோர்சா கட்சியினர் இடையே போட்டி நிலவுகிறது.

Comments (0)
Add Comment