மெரினாவில் கடலில் மூழ்கி பள்ளி மாணவர் பலி..!!

சென்னை மந்தைவெளி ராஜா அண்ணாமலைபுரம் 1-வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் முரளிதரன். இவரது மகன் சாய்விஷால் (13). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று சாய்விஷால் டியூசன் முடித்து விட்டு நண்பர் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. காணாமல் போய்விட்டார். பல இடங்களில் தேடியும் சாய்விஷாலை கண்டு பிடிக்க முடியவில்லை. இதுபற்றி அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் மாணவன் சாய்விஷாலின் உடல் இன்று காலை மெரினா கடற்கரையில் எழிலகம் எதிரே கரை ஒதுங்கியது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணா சதுக்கம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சாய்விஷால், கடலில் குளிக்கச் சென்ற போது மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Comments (0)
Add Comment