விவசாயிகள் பேரணியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை கர்நாடகம் வருகை..!!

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சிக் காலத்தின்போது 24-2-2011 அன்று அம்மாநில சட்டசபையில் விவசாயத்துறைக்கு என முதன்முதலாக தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் வந்த காங்கிரஸ் ஆட்சி இந்த நடைமுறையை பின்பற்றவில்லை.

இந்நிலையில், தற்போது கர்நாடக மாநில பா.ஜ.க. தலைவராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ள எடியூரப்பா நாளை தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

அவரது பிறந்தநாளையொட்டி, தார்வார் மாவட்டத்தில் உள்ள ஹுபல்லி நகரில் நாளை விவசாயிகள் பேரணி நடைபெறுகிறது. இந்த பேரணியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கர்நாடக மாநிலத்துக்கு வருகிறார்.

இந்நிகழ்ச்சியின்போது, எடியூரப்பாவுக்கு ‘விவசாயிகளின் தோழன்’ என்னும் பட்டத்தை சூட்டும் பிரதமர், மரத்தினால் ஆன ஏர் கலப்பையை அவருக்கு பரிசாக அளிக்கிறார் என கர்நாடக பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment