குஜராத்தில் லாரி – பஸ் நேருக்குநேர் மோதிய விபத்தில் 8 பேர் பலி..!!

குஜராத் மாநிலம் சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள கேத்பிரம்மா என்ற இடத்தில் இருந்து 31 தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஜீப் ஒன்று இதார் நகருக்கு இன்று சென்று கொண்டிருந்தது. குந்த்லா என்ற கிராமத்தின் அருகே ஜீப் வந்து கொண்டிருக்கும் போது எதிரே வந்த லாரி மீது எதிர்பாராத விதமாக ஜீப் மோதியது.

மோதிய வேகத்தில் லாரியின் அடியில் ஜீப் நசுங்கியது. இந்த கோர விபத்தில் ஜீப்பில் இருந்த 3 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment