அரியானாவில் மருத்துவம் படித்த ராமேஸ்வரம் மாணவர் சடலமாக மீட்பு..!!

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் கிருஷ்ண பிரசாத் அரியானா மாநிலம் சண்டிகரில் உள்ள நேரு மருத்துவமனை கல்லூரியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், இன்று மாலை விடுதி அறையில் கிருஷ்ண பிரசாத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ண குமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் ரூபாய் இழப்பீடு அறிவித்துள்ளார்.

மேலும், அவரது உடலை தமிழகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிடுள்ளதாகவும் முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment