மூன்று கோடி போலி ரேஷன் கார்டுகளை ரத்து செய்த ஆதார் – ரூ.17 ஆயிரம் கோடி மிச்சம்..!!

அரசின் செயல்பாடுகளை இணையவழியில் செயல்படுத்துவது குறித்தான 21-வது தேசிய மாநாடு ஐதராபாத் நகரில் நடந்து வருகிறது. இம்மாநாட்டின் இன்று கலந்து கொண்ட மத்திய உணவுத்துறை இணை மந்திரி சி.ஆர் சவுத்திரி, ஆதார் எண் இணைக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து பேசினார்.

நாட்டில் உள்ள 23 கோடி ரேஷன் கார்டில் 82 சதவிகித கார்டுகள் ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 2.95 கோடி கார்டுகள் போலி என கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 17 ஆயிரம் கோடி ரூபாய் ஆண்டுதோறும் மிச்சமாகிறது என அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், தெலுங்கானா, ஆந்திரா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரிகள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment