உ.பி.யில் பா.ஜ.க. அரசு அனைத்து துறைகளிலும் தோற்றுவிட்டது – சமாஜ்வாடி குற்றச்சாட்டு..!!

உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. தலைமையிலான அரசு அனைத்து துறைகளிலும் தோற்றுவிட்டது என சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் உத்தம் குற்றம் சாட்டியுள்ளார்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் கோரக்பூர் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரசார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் பிரவீன் நிஷாதை ஆதரித்து கட்சியின் மூத்த தலைவர் நரேஷ் உத்தம் பிரசாரத்தில் ஈடுப்ட்டார். அப்போது அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பணவீக்க உயர்வை கட்டுப்படுத்த தவறிவிட்டது. நாட்டில் வேலைவாய்ப்பின்மை பெரிய பிரச்னையாக இருந்து வருகிறது. குற்றங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டனர்.

கருப்பு பணம் இந்தியாவுக்கு மீண்டும் வரப்போவதில்லை. பொதுமக்கள் வங்கியில் போட்டு வைக்கும் பல்லாயிரக்கணக்கான பணத்தை நிரவ்மோடி போன்றவர்கள் மோசடி செய்து வரும் நிலையில், நாடு வளர்ச்சி பாதையில் செல்வதாக கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது?

முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மதவெறியை தூண்டும் வகையில் பேசியதை நாங்கள் மறக்கவில்லை. ஆனால் இப்போது அவர் வளர்ச்சியை பற்றி பேசி வருவது ஆச்சரியம் அளிக்கிறது என குற்றம் சாட்டினார்.

Comments (0)
Add Comment