சுன்னாகம் பிரதேசசபையில் பரபரப்பு; அம்பலத்துக்கு வந்தது, “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் என்பவரின் தில்லுமுல்லு..! (படங்கள்)


சுன்னாகம் பிரதேசசபையில் பரபரப்பு; அம்பலத்துக்கு வந்தது, “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் என்பவரின் தில்லுமுல்லு..! (படங்கள்)

தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமித்த புளொட் வேட்பாளருக்கு எதிராகவே, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இன்னொரு அணி களமிறங்கிய விசித்திர சம்பவம் இன்று நடந்தது. முன்னாள் தவிசாளரான “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் என்பவரே இந்த சதி நடவடிக்கையில் ஈடுபட்டார்.

இதை தமிழ் தேசிய கூட்டமைப்பு வன்மையாக கண்டித்துள்ளது. சுன்னாகம் பிரதேசசபையைவிட்டு வெளியில் வந்த எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும்போது இதனை குறிப்பிட்டார்.

“தமிழர்களின் வரலாற்றில் இப்படியான நயவஞ்சகங்கள், துரோகத்தனங்கள் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கட்சியின் முடிவை மீறி பிரகாஷ் செயற்பட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஜி.ஜி.பொன்னம்பலம் வெளிநாட்டுக்கு சென்ற சமயத்தில் தமிழ் காங்கிரஸை சேர்ந்தவர்கள், டி.எஸ்.சேனநாயக்கவுடன் சேர்ந்து ஆட்சி மாற்றத்திற்கு முயன்றதை போல, குட்டிமணி, தங்கத்துரையை காட்டிக் கொடுத்ததை போல, தலைவர் பிரபாகரனிற்கு கருணா செய்த துரோகத்தை போன்றது, ஜி.பிரகாஷ் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு செய்தது. அதை ஏற்க முடியாது. இவர்களை கட்சியை விட்டு உடனடியாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இப்படியான துரோகத்தனங்களை உடைத்துக் கொண்டும் கட்சி முன்னேறும்” என்றார்.

இதேவேளை, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு கேட்டபோது, “இப்படியான நடவடிக்கைகளை கட்சி என்றுமே சகித்து கொள்ளாது. உடனடியாக அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்“ என்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளரை எதிர்த்து தமிழரசுக்கட்சி போட்டி… சுன்னாக பிரதேசசபையில் பரபரப்பு…
————————————————————–

தமிழ் தேசிய கூட்டமைப்பு நியமித்த வேட்பாளரை எதிர்த்து, தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் போட்டியிட்ட சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. திருவுளச்சீட்டு மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ புளொட் வேட்பாளர் வெற்றி பெற்றார்.

சுன்னாகம் பிரதேசசபை தவிசாளர் இன்று நடந்தது. இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் புளொட் தர்சன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி, ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழப்ப அணியை சேர்ந்த “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் ஆகியோர் போட்டியிட்டனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த ஜி.பிரகாஷ் கட்சியின் முடிவை மீறி தவிசாளர் பதவிக்கு குறி வைத்துள்ளார் என்ற தகவலை தமிழ் பக்கம் நேற்று முன்தினமே அம்பலப்படுத்தியிருந்தது. சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக்கட்சி என்பனவற்றுடன் த.தே.ம.முன்னணியிடமும் ஆதரவு கோரியிருந்தார். எனினும், த.தே.ம.முன்னணி ஆதரவளிக்கவில்லை.

முதல் சுற்றில் ஐ.தே.க வேட்பாளர் விலக்கப்பட்டு, மூவருக்குமிடையிலான போட்டியானது. பின்னர் த.தே.ம.முன்னணி போட்டியிலிருந்து விலக, தர்சன் மற்றும் ஜி.பிரகாஷிற்கு இடையிலான போட்டியானது.

இதில் இருவரும் தலா 12 வாக்குகளை பெற்றிருந்தனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணி வாக்களிக்கவில்லை. இனவாத கடசிகள் எனக் குறிப்பிடும் தேசியக் கடசிகளான ஐ.தே.க, சு.க என்பன “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷை ஆதரித்தன.

இருவரும் சமஅளவான வாக்கு பெற்றதால் திருவுள சீட்டு மூலம், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ புளொட் வேட்பாளர் தர்சன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, இன்று காலையும் தமிழரசுக்கட்சி தலைவர்கள், பிரகாஷை தொடர்பு கொண்டு, குழப்பத்தில் ஈடுபட கூடாதென அறிவித்திருந்தனர். அதையும் மீறி பதவி ஆசையில் “ஊழல் பேர்வழியான” ஜி.பிரகாஷ் போட்டியிட்டுள்ளார்.

கடந்த தவிசாளர் பதவி காலத்தில் ஜி.பிரகாஷ் செய்த ஊழல்கள் அம்பலமாக கூடாதென்பதற்காகவே, “ஊழல் பேர்வழியான” பிரகாஷ் தொடர்ந்து தவிசாளராக இருக்க முயன்றுள்ளார் என கருதப்படுகிறது.

நன்றி…”பேஜ் தமிழ்”

புளொட் – தமிழரசுக்கட்சி மோதல்: வலிகாமம் தெற்கில் சபையைக் கைப்பற்றியது புளொட்..!! (படங்கள்)

புங்குடுதீவை உள்ளடக்கிய, வேலணை பிரதேச சபை “ஈபிடிபி வசம்”.. மஹிந்த அணி உபதலைவர் பதவியை கைப்பற்றியது… (நடந்தது என்ன?)

Comments (0)
Add Comment