50 அடி பள்ளத்தில் பாய்ந்து கெப் ரக வாகனம் விபத்து..!! (வீடியோ & படங்கள்)

பதுளை மகியங்கனை வீதியின் அம்பகஹஒய பிரதேசத்தில் கெப் ரக வாகனமொன்று சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் , பதுளை பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை , விபத்துக்குள்ளான கெப் ரக வாகனத்தில் இருந்து ;இலங்கைக் கல்வித் திணைக்களத்திற்கு சொந்தமான புத்தகங்கள் சிலவும் மற்றும் பொதிகள் சிலவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , சம்பவம் தொடர்பில் பதுளை காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Comments (0)
Add Comment