பெரிய வெள்ளியை முன்னிட்டு மன்னாரில் சிலுவை பாதை..!! (படங்கள்)

நாட்டின் பல பகுதிகளில் புனித வார பெரிய வெள்ளியை முன்னிட்டு கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப் பாதை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன.

இந்நிலையில் மன்னார், மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் இன்று சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

மன்னார் மறைமாவட்டத்தின் தாய் பங்காக திகலும் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய நிகழ்வுகளிலும், பேசாலை இணை பங்குத்தந்தை அருட்திரு சாந்தன் அடிகளார் தலைமையில் இடம் பெற்ற விவிலிய சிலுவைப்பாதை சடங்கிலும் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment