அரசியல் கைதி ஆனந்த சுதாகரின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று கையெழுத்து திரட்டப்பட்டது.
வவுனியா குட்செட் வீதி, கருமாரி அம்மன் தேவஸ்தானம் முன்பாக குறித்த நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பின் மாவட்ட ஒருங்கினைப்பாளர் என். ரஜீவன் தலைமையில் இடம்பெற்றது.
கருமாரி அம்மன் தேவஸ்தான பிரதம குரு பிரபாகரக்குருக்கள் ஆரம்பித்து வைக்க மத தலைவர்கள், இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு குறித்த அரசியல் கைதியின் விடுதலைக்காக தமது கையொப்பங்களையும் இட்டனர்.
அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…