வாகன திருத்துமிடத்தில் தீ ; ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசம்..!! (படங்கள்)

மட்டக்களப்பு, திருகோணமலை பிரதான வீதி ஊரணி பகுதியிலுள்ள வாகன திருத்துமிடம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது 3 வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த இடத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனம் மற்றும் எரியூட்டப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாவென பாதிக்கப்பட்டுள்ள வாகன திருத்துமிட உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தடயவியல் பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment