வவுனியாவில் சுதந்திரம், மை சோய்ஸ் ஆகிய இரு நூல்கள் வெளியீடு..!! (படங்கள்)

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டமும் வவுனியா ஆங்கில சங்கமும் இணைந்து நடாத்தும் கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களின் மொழிபெயர்ப்பில் உருவான சுதந்திரம் – தென்னாசியக் கவிதைகள் (தமிழில்) , MY CHOICE – SRILANKA TAMIL POETRY IN ENGIISH ஆகிய இரு நூல்கள் வெளியீடும் நிகழ்வு இன்று (31.03.2018) காலை 10.00 மணியளவில் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்க கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டத்தின் தலைவர் தமிழ் மணி அகளங்கன் , ஓய்வு நிலை உதவிக்கல்விப் பணிப்பாளர் சு.பூபாலசிங்கம் அவர்களின் இணைத்தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வவுனியா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஆ.நடராஜா , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் , சு.சண்முகவடிவேல் , உளவளத்துணையாளர்- மனோசாந்தி பி.ஏ.சி.ஆனந்தராஜா , வவுனியா கல்வியற்கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் ந.பார்த்திபன் , சிரேஸ்ட விரிவுரையாளர் சுபாஜனா ஜெயசீலன் , கவிஞர்களான சி.கருணாகரன், மாணிக்கம் ஜெகன் , கலாநிதி கந்தையா ஸ்ரீகணேசன் , வவுனியா ஆங்கிலச் சங்கத்தின் உபதலைவர் நா.தியாகராஜா , தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், வவுனியா பிரதேச கலாசார உத்தியோகத்தர் வீ. பிரதீபன் , பல்கலைக்கழக மாணவர்கள் , சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

நூலின் முதற் பிரதியினை சு.சண்முகவடிவேல் , உளவளத்துணையாளர்- மனோசாந்தி பி.ஏ.சி.ஆனந்தராஜா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

இறுதியில் இரு நூல்களையும் மொழிப்பெயர்ப்பு செய்த கந்தையா ஸ்ரீகணேசன் அவர்களை தமிழ் விருட்சம் அமைப்பினர் பொண்ணாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவிப்பு செய்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…

Comments (0)
Add Comment