நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை சேர்ந்த 25 மக்கள் பிரதிநிதிகள் வழக்கறிஞர் செல்வநாயகம் கேதீஸ்வரன் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக தமிழ் மக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், மாகாணசபை உறுப்பினர்களான ப.தியாகராஜா, இ.இந்திரராஜா, வவுனியா மாவட்ட ஈரோஸ் அமைப்பாளர் பரமு செந்தில் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…