அமைச்சரிடம் கருத்து தெரிவித்த பணியாளர்கள், நாங்கள் அம்மாச்சி உணவகத்தில் இரசாயன மருந்துகள் கலப்படாத மரக்கறிகளினால் சமைத்து வழங்கப்படும் உணவு பொருட்களுக்கு வைத்து பாதுகாப்பாக மக்களுக்கு வழங்க எமக்கு இடங்கள் போதாமையாகவுள்ளது என்று கருத்து தெரிவித்தார்கள்.
அதிகமாக அம்மாச்சி உணவகத்தில் பெண் தலைமைத்துவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் குறித்த உணவகத்தினால் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பிலும், அங்கு உள்ள சவால்கள் தொடர்பிலும் அமைச்சர் இதன்போது கேட்டறிந்துகொண்டார். அமைச்சருடன், அமைச்சின் செயலாளர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதும். அங்கு கருத்து தெரிவித்த அமைச்சர், யுத்தத்தின் பின்னார் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்படுகள் வளர்ச்சியடைந்துள்ளது. இதுதொடர்பாக இம்முறை வரவுசெலவு திட்டத்தில் கூடிய நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்
****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…