வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள ஆலயத்தில் பதட்டம் : இளைஞனோருவன் பொதுமக்களினால் விரட்டியடிப்பு..!! (படங்கள்)

வவுனியா குட்செட் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் நேற்று (30.01.2018) மதியம் மதுபோதையில் இளைஞரோருவன் புகுந்ததினால் சற்று பரபரப்பு ஏற்பட்டதுடன் குறித்த இளைஞன் பொதுமக்களினால் விரட்டியடிக்கப்பட்டார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

அருள்மிகு ஸ்ரீ கருமாரி அம்மன் தேவஸ்தானத்தில் கடந்த 22ம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருந்தது. நேற்றையதினம் தேர்த்திருவிழாவும் சிறப்பாக நடைபெற்று அன்னதானம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் மதுபோதையில் ஆலயத்தினுள் நூழைந்த இளைஞனோருவன் ஆலயத்தினுள் இருந்த பொதுமக்களை தகாத வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி பேசியுள்ளார். பின்னர் பொதுமக்களுக்கு அடிக்க முயன்றுள்ளார். அந்த சமயத்தில் அங்கிருந்த இளைஞர்கள் குறித்த நபரை பிடித்து வெளியேற்றதுடன் பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

எனினும் சம்பவம் முடிவடைந்து பல மணிநேரம் கழித்தே பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததாக பொதுமக்கள் விசனம் தெரிவித்தனர்.

“அதிரடி” இணையத்துக்காக,வவுனியாவிலிருந்து குணா

****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….

Comments (0)
Add Comment