ஆரம்ப நிகழ்வான எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்விற்கு இலங்கையின் பல பாகங்களிலும் சர்வதேச நாடுகளிலும் இருந்து பல இலட்சக்கணக்ககான அடியவர்கள் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து ஆலயத்தில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக வழிபாடுகள் இடம்பெற்றது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டு ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் பலகோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கருங்கல்லினால் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டது.