தொடர் குடியிருப்பில் தீ விபத்து..!! (படங்கள்)

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லோகி தோட்ட கூமூட் பிரிவு தோட்ட குடியிருப்பில் நள்ளிரவு 12 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

இந்த வீட்டில் இருந்த 05 பேரை தற்காலிகமாக அயலவர்களின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தீ ஏற்பட்ட போது வீட்டில் தாயும், மகனும் இருந்ததாகவும், எனினும் அயலவர்கள் ஓடி வந்து அவர்களை காப்பாற்றியதுடன், ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

முற்றாக எரிந்த வீட்டில் பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், உடுதுணிகள் என பெருமளவிலான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இதேவேளை இது தொடர்பாக லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment