2014ஆம் ஆண்டை போலவே மீண்டும் மொயீன் சுழலில் சிக்கி தோல்வியடைந்த இந்திய அணி..!! (வீடியோ)

இந்திய இங்கிலாந்து அணிகளிக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி சௌதாம்ப்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 60 ரன்களை வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-1 என்ற நிலையில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் சுழல் பந்துவீச்சாளர் மொயீன் அலி சிறப்பாக பந்துவீசி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்களையும்,இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட்களையும் வீழ்த்தி இந்திய அணியை நிலைகுலையச்செய்தார்.

மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்திய அவர் ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இரண்டாவது இன்னிங்சில் அவர் விராட் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதுதான் இங்கிலாந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாகும். சௌதாம்ப்டன் மைதானத்தில் மொயீன் அலி இந்திய அணியை வீழ்த்துவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னால் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 266 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

அந்த ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்சில் மொயீன் அலி சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்களை வீழ்த்தியது நினைவு கூறத்தக்கது. முதல் மூன்று போட்டிகளில் விளையாடாத மொயீன் அலி இங்கிலாந்து அணிக்கு திரும்பி இந்திய அணியை வீழ்த்தியதில் பெரும்பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது. மொயீன் அலியின் வாழ்வில் மறக்கமுடியாத இடத்தை பிடித்துள்ளது ஏஜீஸ் பௌல் மைதானம்.

Comments (0)
Add Comment