ஜெயிச்சாலும் இங்கிலாந்துக்கு புது தலைவலி… டெஸ்ட் தொடரை வென்றாலும் தொடரும் குழப்பம்..!! (வீடியோ)

இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. எனினும், இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசையில் பல முடிவு பெறாத குழப்பங்கள் இருக்கின்றன. மேலும், அலஸ்டர் குக் அடுத்த போட்டியோடு ஓய்வு பெற உள்ள நிலையில் அவர் இடத்தை யார் நிரப்புவார்கள் போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. நீண்ட காலமாக இங்கிலாந்து அணிக்கு துவக்க பேட்ஸ்மேனாக இருந்து வந்த அலஸ்டர் குக் ஓய்வு பெற்றால் அவர் இடத்தை யார் நிரப்புவது என்பது தேர்வாளர்கள் முன்பு உள்ள மிகப்பெரிய கேள்வி. ஜென்னிங்க்ஸ் நிரந்தரமில்லை மற்றொரு துவக்க வீரராக இருக்கும் ஜென்னிங்க்ஸ் ஓரளவு ஆடுகிறார் என்றாலும், அவரது இடம் நிரந்தரமா என இப்போதைக்கு சொல்ல முடியாது.

அடுத்த போட்டி வரை அவர் துவக்க வீரராக ஜென்னிங்க்ஸ் இருப்பார். அதன் பின் யாரை துவக்க வீரராக கொண்டு வருவது என்பதில் இங்கிலாந்து அணி தேர்வாளர்கள் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஜோ ரூட் நாலா? மூணா? இது மட்டுமில்லாமல், கேப்டன் ஜோ ரூட் தான் சில காலமாக ஆடி வரும் மூன்றாம் இடத்தில் இருந்து மாறி சென்ற போட்டியில் நான்காம் இடத்தில் பேட்டிங் செய்தார். அவருக்கு அந்த இடத்தில் தான் அதிக ரன் குவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மொயீன் அலிக்கு எந்த இடம்? ஜோ ரூட்டுக்கு பதில் சென்ற போட்டியில் இரண்டாம் இன்னிங்க்ஸில் மொயீன் அலி மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்தார். இவர் சில காலம் கழித்து அணிக்குள் இப்போதுதான் நுழைகிறார். இவரது பேட்டிங் இடமும் இன்னும் உறுதியாகவில்லை. காயத்தில் இருக்கும் பேர்ஸ்டோ பேர்ஸ்டோ விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தில் ஆடி வருகிறார். அவருக்கு தற்போது கையில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே, நிச்சயம் கீப்பிங் செய்ய முடியாது. நான்காம் போட்டியில் பட்லர் தான் கீப்பிங் செய்தார். பேர்ஸ்டோ உடைய பேட்டிங்கும் கடந்த போட்டியில் ஒன்றும் சொல்லிக் கொள்ளும் படி இல்லை.

காயத்தோடு வந்து பேட்டிங் செய்வேன் என சொல்லி வெறும் ஆறு ரன்களே எடுத்தார். இரண்டாம் இன்னிங்க்ஸில் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். இங்கிலாந்து அடுத்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரை சமாளித்துவிடும். அதன் பின்னர் பேட்ஸ்மேன்கள் இறங்கும் இடங்களை சரியாக அமைக்க வேண்டும். புதிய வீரர்களையும் களம் இறக்க வேண்டும். அலஸ்டர் குக் போன்ற திறமையான துவக்க ஆட்டக்காரரை கண்டுபிடிக்க வேண்டும்.

Comments (0)
Add Comment