நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தங்கரத உற்சவம்..!! (படங்கள்)

நல்லூர் மகோற்சவ திருவிழாவின் தங்கரத உற்சவம் நேற்று புதன்கிழமை நடைபெற்றது. கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழாவின் 21ஆம் திருவிழாவான தங்கரத உற்சவத்தின் போது, வேல் பெருமான், வள்ளி, தெய்வானை சமேதரராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.

மாலை 4.45 மணியளவில் ஆரம்பமான விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை இடம்பெற்று , வேல் பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் உள்வீதியுலா வந்து மாலை 6 மணிக்கு தங்கரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

நேற்றைய திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனின் அருட்காட்சியை கண்டு களித்தனர்

படங்கள்: ஐ.சிவசாந்தன்

Comments (0)
Add Comment