உங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா?..!!

உங்கள் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதா? அதனால் உடல் சுறு, சுறுப்பாக இல்லாமல் சோர்வாக உள்ளீர்களா? இதோ உங்களுக்கான தகவல்.

உலகம் முழுவதும் நோய் பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் இருந்தாலும் உங்கள் உடல் பாதிக்கப்படுவதற்கு உங்கள் ஆரோக்கிய சீர்கேடு மட்டுமே காரணம்.

போதுமான அளவு உறக்கம் பெற்று, மனச்சோர்வை தடுத்திடுங்கள். தூக்கமின்மை மற்றும் மனஅழுத்தம், கார்டிசால் என்னும் ஹார்மோன் சுரப்பை அதிகரிக்கிறது. இந்த ஹார்மோன் அதிகம் சுரப்பதால் நோயெதிர்ப்பு செயல்பாடு குறைகிறது.

புகைப்பிடித்தல்
புகையிலை மற்றும் புகைப் பழக்கத்தை விட்டு விடுங்கள். இது அடிப்படை நோயெதிர்ப்பு பாதுகாப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. மற்றும் அனைவருக்கும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நிமோனியா ஆபத்துக்களை எழுப்புகிறது, குழந்தைகளில் நடுத்தர காது தொற்று நோயை உண்டாக்குகிறது.

காய்கறிகள்
உங்கள் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளை காய்கறிகள், பழங்கள், பருப்புகள், விதைகள் ஆகியவை போதுமான அளவு தருவதால் அவற்றை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். பெரியவர்கள் அதிக அளவு பழங்கள் மற்றும் காய்கறிகள் எடுத்துக் கொள்வதால், ஸ்ட்ரெப்டோகோகஸ் நிமோனியாவிற்கு எதிராக செயல்பட வைக்கும் நிமோ வேக்ஸ் தடுப்பூசிக்கு ஆதரவாக உடல் செயல்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது.

பால் பொருள்கள்
நுண்ணுயிர் கலந்து தயாரிக்கப்படும் உணவுகள் சிருவாழூண் என்னும் ப்ரோபயோடிக்குகள் ஆகும். இவை உடலுக்கு நன்மை விளைவிக்கின்றன. சுவாசம் மற்றும் இரைப்பை குடல் நோய்த்தொற்றுகளின் நிகழ்வுகளை இவைகள் குறைக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புளிக்க வைத்த பால் பொருட்கள் பெரியவர்கள் மற்றும் குழந்தைகளின் சுவாச தொடர்பான தொற்றை போக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சூரியக் கதிர்கள்
சூரியக்கதிர்களை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் சருமம் உற்பத்தி செய்யும் வைட்டமின் Dன் அளவை சூரிய ஒளி தூண்டுகிறது. வெயில் காலங்களில் தினமும் 10-15 நிமிடம் சூரிய ஒளியில் நிற்பதால் நன்மை கிடைக்கிறது. ஆனால் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சூரிய ஒளியின் பலம் குறையும். மிகச் சில உணவுகளில் மட்டுமே வைட்டமின் டி சத்து உள்ளது. வைட்டமின் டி சத்து குறைபாடால் சுவாச தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

பூண்டு
தினமும் பூண்டு சாப்பிடுங்கள். பூண்டு ஒரு நுண்ணுயிர் எதிர்ப்பி மற்றும் நோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு உணவுப்பொருள். வெப்பம் முக்கிய செயலாக்க மூலப்பொருளை செயலிழக்க செய்யும் என்பதால், உணவிற்கு முன் பூண்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

காளான்
ஷிடேக் மற்றும் மைடேக் போன்ற மருத்துவ வகை காளான்களை உணவில் இணைத்துக் கொள்ளுங்கள். ஷிட்டேக் காளான்களின் சாற்றை எடுத்துக் கொள்வதால் மார்பக புற்று நோய் உள்ள பெண்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வு கூறுகிறது.

நிலவேம்பு கசாயம்
பருகுவதால் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலம் அதிக சக்தியைப் பெறுகிறது. சுவாச பகுதியில் உள்ள கிருமிகள் பலம் அதிகரிக்கும் போது இதனை எடுத்துக் கொள்வதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கிருமிகள் அழிக்கப்படுகின்றன.

Comments (0)
Add Comment